Tamil சத்தியவேதம்

உன்னதப்பாட்டு மொத்தம் 8 அதிகாரங்கள்

உன்னதப்பாட்டு

உன்னதப்பாட்டு அதிகாரம் 1
உன்னதப்பாட்டு அதிகாரம் 1

விருந்து 1 சாலொமோன் பாடின உன்னதப்பாட்டு. மணவாளி

2 நீர் உமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவீராக* அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக : உமது நேசம் திராட்சைரசத்தைவிட இன்பமானது.

உன்னதப்பாட்டு அதிகாரம் 1

3 உமது நறுமணமுள்ள தைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றப்பட்ட நறுமணமுள்ள தைலமாக இருக்கிறது; ஆகையால் இளம்பெண்கள் உம்மை நேசிக்கிறார்கள்.

4 என்னை இழுத்துக்கொள்ளும், உமக்குப் பின்னே ஓடிவருவோம்; ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டு வந்தார்; நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்; திராட்சைரசத்தைவிட உமது நேசத்தை நினைப்போம்; உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.

உன்னதப்பாட்டு அதிகாரம் 1

5 எருசலேமின் பெண்களே! கேதாரின் கேதார் அராபியர்களில் ஒரு இஸ்மவேல் கோத்திரம். பார்க்க, ஆதி. 25:13, ஏசாயா. 21:16-17, சங்கீதம், 120:5 ஒரு வாலிப பெண்ணின் கறுப்பு நிறத் தோல் கூடாரங்களைப்போலவும், சாலொமோனின் திரைகளைப்போலவும் நான் கறுப்பாக இருந்தாலும், அழகாக இருக்கிறேன்.

6 நான் கறுப்பாக இருக்கிறேன் என்று பார்க்காதீர்கள்; வெயில் என்மேல் பட்டது; என் சகோதரர்கள் என்மேல் கோபமாயிருந்து, என்னைத் திராட்சைத் தோட்டங்களுக்குக் அதிக பால் உணர்வுள்ள ஒரு வாலிப பெண்ணை குறிக்கலாம் காவற்காரியாக வைத்தார்கள்; என் சொந்தத் திராட்சைத்தோட்டத்தையோ நான் காக்கவில்லை.

உன்னதப்பாட்டு அதிகாரம் 1

7 என் ஆத்தும நேசரே! உமது மந்தையை எங்கே மேய்த்து, அதை மத்தியானத்தில் எங்கே சேர்க்கிறீர்? எனக்குச் சொல்லும்; உமது தோழர்களின் மந்தைகளின் அருகே அலைந்து திரிகிறவளைப்போல§ முக்காடுயிட்ட பெண்ணைப் போல் நான் இருக்கவேண்டியதென்ன? மணவாளன்

உன்னதப்பாட்டு அதிகாரம் 1

8 பெண்களில் அழகு மிகுந்தவளே! அதை நீ அறியவில்லையென்றால், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய், மேய்ப்பர்களுடைய கூடாரங்களுக்கு அருகில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு.

9 என் பிரியமே! பார்வோனுடைய இரதங்களில் பூட்டப்பட்டிருக்கிற பெண்குதிரைக் கூட்டத்திற்கு உன்னை ஒப்பிடுகிறேன்.

உன்னதப்பாட்டு அதிகாரம் 1

10 அணிகலன்கள் அணிந்த உன் கன்னங்களும், ஆரங்கள் அணிந்த உன் கழுத்தும் அழகாக இருக்கிறது. மணவாளி

11 வெள்ளிப் பொட்டுகளுள்ள பொன் ஆபரணங்களை உனக்குச் செய்விப்போம்.

12 ராஜா தமது பந்தியிலிருக்கும்* மஞ்சத்தில் படுத்திருக்கும் வரை வரை என்னுடைய நறுமணமுள்ள தைலம் தன் வாசனையை வீசும்.

உன்னதப்பாட்டு அதிகாரம் 1

13 என் நேசர் எனக்கு என் மார்பகங்களின் நடுவில் தங்கும் வெள்ளைப்போளச் செண்டு.

14 என் நேசர் எனக்கு எங்கேதி சவக் கடலின் தென்மேற்கு பகுதியில் உள்ள சோலைவனம், இது நீர் ஊற்றுகளால் செழிப்பாக இருந்தது, மனதை குளிர செய்தது. ஊர் திராட்சைத்தோட்டங்களில் முளைக்கும் மருதாணிப் பூங்கொத்து. மணவாளன்

உன்னதப்பாட்டு அதிகாரம் 1

15 என் பிரியமே! நீ அழகு மிகுந்தவள்; நீ மிக அழகுள்ளவள்; உன் கண்கள் புறாக்கண்கள். மணவாளி

16 நீர் ரூபமுள்ளவர்; என் நேசரே! நீர் இன்பமானவர்; நம்முடைய படுக்கை பசுமையானது.

17 நம்முடைய வீட்டின் உத்திரங்கள் கேதுரு மரம், நம்முடைய வீட்டின் மேல்தளம் தேவதாரு மரம்.