Tamil சத்தியவேதம்
சங்கீதம் மொத்தம் 150 அதிகாரங்கள்
சங்கீதம்
சங்கீதம் அதிகாரம் 15
சங்கீதம் அதிகாரம் 15
கடவுள் மனிதரிடம் எதிர்பார்ப்பவை
(தாவீதின் புகழ்ப்பா)
1 ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்? உம் திருமலையில் குடியிருப்பவர் யார்? [* உரோ 3:10-12.. ]
2 மாசற்றவராய் நடப்போரே! — இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமார உண்மை பேசுவர்; [* உரோ 3:10-12.. ]
சங்கீதம் அதிகாரம் 15
3 தம் நாவினால் புறங்கூறார்; தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார். [* உரோ 3:10-12.. ]
4 நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்; தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார்;
சங்கீதம் அதிகாரம் 15
5 தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; — இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர்.