Tamil சத்தியவேதம்

சங்கீதம் மொத்தம் 150 அதிகாரங்கள்

சங்கீதம்

சங்கீதம் அதிகாரம் 127
சங்கீதம் அதிகாரம் 127

கடவுளின் அருளும் நலன்களும்
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்; சாலமோனுக்கு உரியது)

1 ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில், அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும்; ஆண்டவரே நகரைக் காக்கவில்லையெனில், காவலர்கள் விழித்திருப்பதும் வீணாகும்.

சங்கீதம் அதிகாரம் 127

2 வைகறையில் விழித்தெழுந்து நள்ளிரவில் ஓய்வெடுக்கும்வரை மானிடர் தம் உணவுக்காக வருந்தி உழைப்பது வீணே! உறங்கும்போதும் கடவுளின் அன்பர் தேவையானதை அவரிடமிருந்து பெற்றுக்கொள்வர்.

சங்கீதம் அதிகாரம் 127

3 பிள்ளைகள், ஆண்டவர் அருளும் செல்வம்; மக்கட்பேறு, அவர் அளிக்கும் பரிசில்.

4 இளமையில் ஒருவருக்குப் பிறக்கும் மைந்தர் வீரரின் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்.

சங்கீதம் அதிகாரம் 127

5 அவற்றால் தம் அம்பறாத் தூணியை நிரப்பிய வீரர் நற்பேறு பெற்றோர்; நீதிமன்றத்தில் எதிரிகளோடு வழக்காடும்போது அவர் இகழ்ச்சியடையமாட்டார்.