Tamil சத்தியவேதம்
சங்கீதம் மொத்தம் 150 அதிகாரங்கள்
சங்கீதம்
சங்கீதம் அதிகாரம் 107
சங்கீதம் அதிகாரம் 107
ஐந்தாம் பகுதிகடவுளின் கருணையைப் புகழ்தல் 1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. [* 1 குறி 16:34; 2 குறி 5:13; 7:3; எஸ்ரா 3:11; திபா 100:5; 106:1; 118:1; 136:1; எரே 33:11.. ]
சங்கீதம் அதிகாரம் 107
2 ஆண்டவரால் மீட்படைந்தோர், எதிரியின் கையினின்று அவரால் மீட்கப்பட்டோர்,
3 கிழக்கினின்றும் மேற்கினின்றும், வடக்கினின்றும் தெற்கினின்றும், பல நாடுகளினின்றும் ஒன்று சேர்க்கப்பட்டோர் சொல்வார்களாக.
சங்கீதம் அதிகாரம் 107
4 பாலைநிலத்தில் பாழ் வெளியில் சிலர் அலைந்து திரிந்தனர்; குடியிருக்குமாறு ஒரு நகருக்குச் செல்ல அவர்கள் வழி காணவில்லை;
5 பசியுற்றனர்; தாகமுற்றனர்; மனச்சோர்வுற்றுக் களைத்துப்போயினர்.
சங்கீதம் அதிகாரம் 107
6 தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்; அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர்களை அவர் விடுவித்தார்.
7 நேரிய பாதையில் அவர்களை வழிநடத்தினார்; குடியிருக்கும் நகரை அவர்கள் அடையச் செய்தார்.
சங்கீதம் அதிகாரம் 107
8 ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடர்களுக்காக அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு, அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக!
9 ஏனெனில், தாகமுற்றோர்க்கு அவர் நிறைவளித்தார்; பசியுற்றோரை நன்மையால் நிரப்பினார்.
சங்கீதம் அதிகாரம் 107
10 சிலர் காரிருளிலும் சாவின் நிழலிலும் கிடந்தனர்; விலங்கிடப்பட்டுத் துன்பத்தில் உழன்றனர்.
11 ஏனெனில், அவர்கள் இறைவனின் கட்டளைகளை எதிர்த்து நின்றனர்; உன்னதரின் அறிவுரைகளைப் புறக்கணித்தனர்.
சங்கீதம் அதிகாரம் 107
12 கடும் வேலையால் அவர் அவர்களின் உள்ளத்தைச் சிறுமைப்படுத்தினார்; அவர்கள் நிலைகுலைந்து போயினர்; அவர்களுக்குத் துணைசெய்வார் எவருமிலர்.
13 அவர்கள் தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்; அவர் அவர்களைத் துன்பங்களிலிருந்து விடுவித்தார்.
சங்கீதம் அதிகாரம் 107
14 காரிருளிலும் சாவின் நிழலிலும் கிடந்த அவர்களை அவர் வெளிக்கொணர்ந்தார். அவர்களைப் பிணித்திருந்த தளைகளைத் தகர்த்தெறிந்தார்.
15 ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடரான அவர்களுக்கு அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு, அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக!
சங்கீதம் அதிகாரம் 107
16 ஏனெனில், வெண்கலக் கதவுகளை அவர் தகர்த்துவிட்டார்; இரும்புத் தாழ்ப்பாள்களை உடைத்துவிட்டார்.
17 சிலர் தங்கள் தீயநெறிகளை முன்னிட்டு நோய்களுக்கு உள்ளாயினர்; அவர்களுடைய தீச்செயல்களின் பொருட்டுத் துன்பங்களுக்கு உள்ளாயினர்.
சங்கீதம் அதிகாரம் 107
18 எல்லா உணவையும் அவர்களின் மனம் வெறுத்தது; சாவின் வாயில்களை அவர்கள் நெருங்கினார்கள்.
19 அவர்கள் தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்; அவர் அவர்களைத் துன்பங்களினின்று விடுவித்தார்.
சங்கீதம் அதிகாரம் 107
20 தம் வார்த்தையை அவர் அனுப்பி அவர்களைக் குணப்படுத்தினார்; அழிவினின்று அவர்களை விடுவித்தார்.
21 ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடரான அவர்களுக்கு அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு, அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக!
சங்கீதம் அதிகாரம் 107
22 நன்றிப் பலிகளை அவர்கள் செலுத்துவார்களாக! அக்களிப்போடு அவர்தம் செயல்களைப் புகழ்ந்தேத்துவார்களாக!
23 சிலர் கப்பலேறிக் கடல்வழிச் சென்றனர்; நீர்த்திரள்மீது வாணிகம் செய்தனர்.
சங்கீதம் அதிகாரம் 107
24 அவர்களும் ஆண்டவரின் செயல்களைக் கண்டனர்; ஆழ்கடலில் அவர்தம் வியத்தகு செயல்களைப் பார்த்தனர்.
25 அவர் ஒரு வார்த்தை சொல்ல, புயல் காற்று எழுந்தது; அது கடலின் அலைகளைக் கொந்தளிக்கச் செய்தது.
சங்கீதம் அதிகாரம் 107
26 அவர்கள் வானமட்டும் மேலே வீசப்பட்டனர்; பாதாளமட்டும் கீழே தள்ளப்பட்டனர்; அவர்கள் உள்ளமோ இக்கட்டால் நிலைகுலைந்தது.
27 குடிவெறியரைப் போல் அவர்கள் தள்ளாடித் தடுமாறினர்; அவர்களின் திறனெல்லாம் பயனற்றுப் போயிற்று.
சங்கீதம் அதிகாரம் 107
28 தம் நெருக்கடியில் அவர்கள் ஆண்டவரைக் கூவியழைத்தனர்; அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர் அவர்களை விடுவித்தார்.
29 புயல்காற்றை அவர் பூந்தென்றலாக மாற்றினார்; கடல் அலைகளும் ஓய்ந்துவிட்டன.
சங்கீதம் அதிகாரம் 107
30 அமைதி உண்டானதால் அவர்கள் மகிழ்ச்சியுற்றனர்; அவர்கள் விரும்பிய துறைமுகத்திற்கு அவர் அவர்களைக் கொண்டு போய்ச் சேர்த்தார்.
31 ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடரான அவர்களுக்கு அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு அவர்கள் அவருக்கு நன்றி செலுத்தவார்களாக!
சங்கீதம் அதிகாரம் 107
32 மக்களின் பேரவையில் அவரைப் புகழ்ந்தேத்துவார்களாக! பெரியோரின் மன்றத்தில் அவரைப் போற்றுவார்களாக!
33 ஆறுகளை அவர் பாலை நிலமாக்கினார்; நீரோடைகளை அவர் வறண்ட தரையாக்கினார்.
சங்கீதம் அதிகாரம் 107
34 செழிப்பான நிலத்தை உவர் நிலமாக்கினார்; அங்குக் குடியிருந்தோரின் தீச்செயலை முன்னிட்டு இப்படிச் செய்தார்.
35 பாலை நிலத்தையோ நீர்த் தடாகமாக மாற்றினார்; வறண்ட நிலத்தை நீருற்றுகளாகச் செய்தார்.
சங்கீதம் அதிகாரம் 107
36 பசியுற்றோரை அங்கே குடியேற்றினார்; அவர்கள் அங்கே குடியிருக்க நகரொன்றை அமைத்தனர்.
37 அங்கே அவர்கள் வயலில் விதைத்தனர்; திராட்சைத் தோட்டங்களை அமைத்தனர்; அறுவடைக்கான கனிகளை அவை ஈன்றன.
சங்கீதம் அதிகாரம் 107
38 அவர் ஆசி வழங்கினார்; அவர்கள் மிகுதியாகப் பல்கிப் பெருகினர்; அவர்களின் கால்நடைகளைக் குறைந்துபோக விடவில்லை.
39 பின்பு, அவர்களின் தொகை குறைந்தது; அவர்கள் ஒடுக்கப்பட்டு, துன்புறுத்துப்பட்டு இகழ்ச்சிக்கு உள்ளாயினர்.
சங்கீதம் அதிகாரம் 107
40 தலைவர்கள்மேல் இகழ்ச்சியைக் கொட்டி, அவர்களைப் பாதையற்ற பாழ் வெளியில் அலையச் செய்தார் அவர்.
41 ஆனால், எளியோரை அவர் துன்ப நிலையினின்று தூக்கிவிட்டார், அவர்கள் குடும்பங்களை மந்தை போல் பெருகச் செய்தார்.
சங்கீதம் அதிகாரம் 107
42 நேர்மையுள்ளோர் இதைப் பார்த்து மகிழ்கின்றனர்; தீயோர் யாவரும் தங்கள் வாயை மூடிக்கொள்கின்றனர்.
43 ஞானமுள்ளோர் இவற்றைக் கவனத்தில் கொள்ளட்டும்! அவர்கள் ஆண்டவரின் பேரன்பை உணர்ந்து கொள்ளட்டும்!