Tamil சத்தியவேதம்
லேவியராகமம் மொத்தம் 27 அதிகாரங்கள்
லேவியராகமம்
லேவியராகமம் அதிகாரம் 15
லேவியராகமம் அதிகாரம் 15
உடலில் ஏற்படும் தூய்மையற்ற ஒழுக்கு 1 ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது:
2 “இஸ்ரயேல் மக்களுக்கு நீங்கள் கூறவேண்டியது: * மத் 8:4; மாற் 1:44; லூக் 5:14; 17: 14.
3 ஒருவனுக்கு விந்து ஒழுக்கு இருப்பின் — உடலிலிருந்து அது வெளிப்பட்டாலும், உடலுள் அடக்கிவைக்கப்பட்டாலும் — அது அவனுக்குத் தீட்டு.
லேவியராகமம் அதிகாரம் 15
4 விந்து ஒழுக்கு உடையவன் படுக்கும் படுக்கை அனைத்தும் தீட்டு; அவன் அமரும் இருக்கை அனைத்தும் தீட்டே.
5 அவன் படுக்கையைத் தொடுபவன், தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுக வேண்டும். மாலை மட்டும் அவன் தீட்டுடையவன்.
6 விந்து ஒழுக்கு உடையவன் அமர்ந்தவற்றின் மீது அமர்பவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுக வேண்டும். மாலை மட்டும் அவன் தீட்டுடையவன்.
லேவியராகமம் அதிகாரம் 15
7 அவன் உடலைத் தொடுபவனும் தன் உடைகளைத் துவைத்து தண்ணீரில் முழுக வேண்டும். மாலை மட்டும் அவன் தீட்டுடையவன்.
8 அவன் தீட்டற்ற ஒருவன்மீது உமிழ்ந்தால், இவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுகவேண்டும். மாலைமட்டும் அவன் தீட்டுடையவன்.
9 அவன் ஏறிப் பயணம் செய்பவை அனைத்தும் தீட்டு.
10 அவன் அடியிலிருக்கும் எதையும் தொடுபவன் ஒவ்வொருவனும் மாலைமட்டும் தீட்டுடையவன். அதைச் சுமப்பவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுகவேண்டும். மாலைமட்டும் அவன் தீட்டுடையவன். * ‘லாகு’ என்பது எபிரேய பாடம்..
லேவியராகமம் அதிகாரம் 15
11 அவன் தன்னைத் தண்ணீரில் கழுவாதிருக்கையில், தன்கையால் எவனைத் தொட்டாலும், அவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுகவேண்டும். மாலை மட்டும் அவன் தீட்டுடையவன்.
12 அவன் தொடும் மண்பாண்டம் உடைக்கப்படவேண்டும்; மரக்கலம் தண்ணீரில் அலசப்படவேண்டும்.
13 அவனது ஒழுக்கு நின்று தீட்டு அகன்றால், அவன் தன்னைத் தீட்டகற்ற ஏழுநாள் காத்திருக்கவேண்டும்; பின்பு, அவன் தன் உடைகளைத் துவைத்து, தன் உடலை ஊற்று நீரில் கழுவியதும், அவனது தீட்டு அகலும்.
லேவியராகமம் அதிகாரம் 15
14 எட்டாம் நாள், இரு காட்டுப் புறாக்களை அல்லது புறாக் குஞ்சுகளை, சந்திப்புக்கூடார வாயிலில் ஆண்டவர் திருமுன் குருவிடம் கொடுக்க வேண்டும்.
15 குரு அவற்றில் ஒன்றைப் பாவம் போக்கும் பலியாகவும், மற்றதை எரிபலியாகவும் செலுத்தி அவனுக்காக, ஆண்டவர் திருமுன் பாவக்கழுவாய் நிறைவேற்றுவார்.
16 விந்து கழிந்தவனும் தன் உடலைக் கழுவுவான். மாலை மட்டும் அவன் தீட்டுடையவன்.
லேவியராகமம் அதிகாரம் 15
17 விந்து பட்டதோலும் உடையும் நீரால் கழுவப்படவேண்டும். மாலைமட்டும் அவை தீட்டாயிருக்கும்.
18 அவனுடன் அவன் மனைவி படுத்திருந்தால், இருவரும் தண்ணீரில் முழுக வேண்டும். மாலைமட்டும் அவர்கள் தீட்டாயிருப்பர்.
19 மாதவிலக்கில் இரத்தப்பெருக்குடைய பெண் ஏழுநாள் விலக்காய் இருப்பாள். அவளைத் தொடுபவர் மாலைமட்டும் தீட்டாயிருப்பர்.
லேவியராகமம் அதிகாரம் 15
20 மாத விலக்கின்மீது எதன்மீது படுக்கிறாளோ, எவற்றின்மீது அமர்கிறாளோ அவை அனைத்தும் தீட்டே.
21 அவள் படுக்கையைத் தொடுபவர் அனைவரும் தம் உடைகளைத் துவைத்து நீரில் முழுகவேண்டும். மாலைமட்டும் அவர்கள் தீட்டாய் இருப்பர்.
22 அவள் அமரும் மணையைத் தொடுபவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுகவேண்டும். மாலைமட்டும் அவன் தீட்டாய் இருப்பான்.
லேவியராகமம் அதிகாரம் 15
23 அவள் படுக்கையின்மீதும் அவள் அமர்ந்த மணையின்மீதும் இருந்த எதையாகிலும் தொட்டவனும் மாலைமட்டும் தீட்டாய் இருப்பான்.
24 ஒருவன் அவளுடன் படுக்கையில் படுத்துக்கொண்டு, அவள் தீட்டு அவன் மீதுபட்டது என்றால், அவன் ஏழுநாள் தீட்டுடையவன்; அவன் படுக்கும் படுக்கை அனைத்தும் தீட்டே.
25 பெண் ஒருத்திக்கு உரிய மாதவிலக்கு நாள்கள் கடந்தும் உதிரப்பெருக்கு நீடித்தால், அந்த நாள்கள் எல்லாம் விலக்கு நாள்களைப்போல் தீட்டானவையே.
லேவியராகமம் அதிகாரம் 15
26 அந்த நாள்கள் எல்லாம் அவள் படுக்கும் படுக்கை அனைத்தும், விலக்குக் காலப் படுக்கைக்கு ஒத்ததே; அவள் அமரும் அனைத்தும் தீட்டுக் காலத்தைப் போன்றே விலக்காய் இருக்கும்.
27 அவற்றைத் தொடுபவன் தன் உடைகளைத் துவைத்து, நீரில் மூழ்கவேண்டும். மாலைமட்டும் அவன் தீட்டாய் இருப்பான்.
28 அவள் தன் இரத்தப்பெருக்கு நின்றபின், ஏழு நாள் கழித்தபின் தீட்டற்றவள் ஆவாள்.
லேவியராகமம் அதிகாரம் 15
29 எட்டாம் நாள், இரு காட்டுப் புறாக்களையோ புறாக் குஞ்சுகளையோ சந்திப்புக் கூடார வாயிலில் குருவிடம் கொண்டு வருவாள்.
30 குரு அவற்றில் ஒன்றைப் பாவம் போக்கும் பலியும் மற்றதை எரி பலியுமாக்கி, அவளுக்காக ஆண்டவர் திருமுன் பாவக்கழுவாய் நிறைவேற்றுவார்.
31 இஸ்ரயேல் மக்கள், தங்கள் நடுவே இருக்கும் எனது தங்குமிடத்தைத் தீட்டாக்கி, சாகாதபடிக்கு, நீங்கள் அவர்கள் தீட்டுகளிலிருந்து அவர்களை விலக்கி வைக்க வேண்டும்.
லேவியராகமம் அதிகாரம் 15
32 விந்து ஒழுக்கினாலும் விந்து அழிவினாலும் தீட்டானவனுக்கும்
33 தன் விலக்கினாலும் நோயுற்றவளுக்கும் — உடல் தூய்மையற்ற ஆணுக்கும் பெண்ணுக்கும் — தீட்டாயிருப்பவளோடு படுத்தவனுக்கும், உரிய சட்டம் இதுவே”.