Tamil சத்தியவேதம்
புலம்பல் மொத்தம் 5 அதிகாரங்கள்
புலம்பல்
புலம்பல் அதிகாரம் 5
புலம்பல் அதிகாரம் 5
இறைவனின் இரக்கத்திற்காக வேண்டல் 1 ஆண்டவரே, எங்களுக்கு நேரிட்டதை நினைந்தருளும்! எங்கள் அவமானத்தைக் கவனித்துப்பாரும்.
2 எங்கள் உரிமைச்சொத்து அன்னியர்கைவசம் ஆயிற்று; வீடுகள் வேற்று நாட்டினர் கைக்கு மாறிற்று.
புலம்பல் அதிகாரம் 5
3 நாங்கள் தந்தையற்ற அனாதைகள் ஆனோம்! எங்கள் அன்னையர் கைம்பெண்டிர் ஆயினர்!
4 நாங்கள் தண்ணீரை விலைக்கு வாங்கிக் குடிக்கிறோம்! விறகையும் பணம் கொடுத்தே வாங்குகிறோம்!
புலம்பல் அதிகாரம் 5
5 கழுத்தில் நுகத்தோடு விரட்டப்படுகிறோம்! சோர்ந்துபோனோம்! எங்களுக்கு ஓய்வே இல்லை!
6 உணவால் நிறைவு பெற, எம் கையை எகிப்தியர், அசீரியரிடம் நீட்டினோம்! * தொநூ 19: 24.
புலம்பல் அதிகாரம் 5
7 பாவம் செய்த எம் தந்தையர் மடிந்து போயினர்! நாங்களோ அவர்கள் குற்றப்பழியைச் சுமக்கின்றோம்!
8 அடிமைகள் எங்களை ஆளுகின்றார்கள்! எங்களை அவர்கள் கையினின்று விடுவிப்பர் எவரும் இல்லை!
புலம்பல் அதிகாரம் 5
9 பாலைநில வாளை முன்னிட்டு, உயிரைப் பணயம் வைத்து எங்கள் உணவைப் பெறுகிறோம்!
10 பஞ்சத்தின் கொடுந்தணலால் எங்கள் மேனி அடுப்பெனக் கனன்றது! [* இச 28:57; எசே 5:10.. ]
புலம்பல் அதிகாரம் 5
11 சீயோன் மங்கையர் கெடுக்கப்பட்டனர்! நகர்களின் கன்னியர் கற்பழிக்கப்பட்டனர்!
12 தலைவர்கள் பகைவர் கையால் தூக்கிலிடப்பட்டனர்! முதியோர்களையும் அவர்கள் மதிக்கவில்லை!
புலம்பல் அதிகாரம் 5
13 இளைஞர்கள் இயந்திரக் கல்லை இழுக்கின்றனர்! சிறுவர் விறகு சுமந்து தள்ளாடுகின்றனர்!
14 முதியோர் நுழைவாயிலில் அமர்வதைக் கைவிட்டனர்! இளையோர் இசை மீட்டலைத் துறந்துவிட்டனர்!
புலம்பல் அதிகாரம் 5
15 எங்கள் இதயத்தின் மகிழ்ச்சி ஒழிந்தது! எங்கள் நடனம் புலம்பலாக மாறியது!
16 எங்கள் தலையினின்று மணிமுடி வீழ்ந்தது! நாங்கள் பாவம் செய்தோம்! எங்களுக்கு ஐயோ கேடு!
புலம்பல் அதிகாரம் 5
17 இதனால் எங்கள் இதயம் தளர்ந்து போயிற்று; எங்கள் கண்கள் இருண்டுபோயின.
18 சீயோன் மலை பாழடைந்து கிடக்கின்றது; நரிகள் அங்கே நடமாடுகின்றன.
புலம்பல் அதிகாரம் 5
19 நீரோ ஆண்டவரே, என்றென்றும் வாழ்கின்றீர்! உமது அரியணை தலைமுறை தலைமுறையாய் உளதாமே!
20 ஆண்டவரே! தொடர்ந்து எங்களை கைவிட்டது ஏன்? இத்துணைக் காலமாய் எங்களைக் மறந்தது ஏன்?
புலம்பல் அதிகாரம் 5
21 ஆண்டவரே! எம்மை உம்பால் திருப்பியருளும்! நாங்களும் உம்மிடம் திரும்புவோம்! முற்காலத்தே இருந்ததுபோல! எம் நாள்களைப் புதுப்பித்தருளும்!
22 எங்களை முற்றிலும் தள்ளிவிட்டீரோ! எங்கள் மேல் இத்துணை வெஞ்சினம் கொண்டீரே!