Tamil சத்தியவேதம்

நியாயாதிபதிகள் மொத்தம் 21 அதிகாரங்கள்

நியாயாதிபதிகள்

நியாயாதிபதிகள் அதிகாரம் 3
நியாயாதிபதிகள் அதிகாரம் 3

நாட்டில் எஞ்சியிருந்த வேற்றினத்தார் 1 இஸ்ரயேல் மக்களைச் சோதிக்கும்படி இந்த வேற்றினங்களை ஆண்டவர் விட்டு வைத்திருந்தார். இம்மக்கள் அனைவரும் கானானின் போர் முறையை அறிந்திருக்கவில்லை.

2 இஸ்ரயேல் மக்களின் இத்தலைமுறையினர் போர்முறையைக் கற்றுக் கொள்ளுமாறும் இதனை இதுவரை அறியாதோர்க்குக் கற்றுத்தருமாறும் விட்டுவைக்கப்பட்டோர்; * விப 34:12-13; இச 7:2- 5.

நியாயாதிபதிகள் அதிகாரம் 3

3 ஐந்து பெலிஸ்திய இளவரசர், அனைத்துக் கானானியர், சீதோனியர், பாகால் எர்மோன் மலைநாட்டிலிருந்து ஆமாத்துக் கணவாய்வரை லெபனோன் மலையில் வாழ்ந்த இவ்வியர்.

4 மோசே வழியாக இஸ்ரயேலரின் மூதாதையருக்கு ஆண்டவர் இட்ட கட்டளைகளுக்கு அவர்கள் கீழ்ப்படிவார்களா என்று சோதித்து அறியும் பொருட்டு அவர்கள் விடப்பட்டிருந்தனர்.

5 இஸ்ரயேல் மக்கள் கானானியர், இத்தியர், எமோரியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் நடுவில் வாழ்ந்தனர்.

நியாயாதிபதிகள் அதிகாரம் 3

6 இவர்கள், அவர்கள் புதல்வியரைத் தங்கள் மனைவியராகக் கொண்டனர்; தங்கள் புதல்வியரை அவர்கள் புதல்வருக்குக் கொடுத்தனர்; அவர்களுடைய தெய்வங்களுக்கு ஊழியம் செய்தனர்.

ஒத்னியேல் 7 ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதை இஸ்ரயேலர் செய்தனர். தங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து, பாகாலுக்கும் அசேராக்களுக்கும் ஊழியம் செய்தனர்.

நியாயாதிபதிகள் அதிகாரம் 3

8 இஸ்ரயேலருக்கு எதிராக ஆண்டவரின் சினம் மூண்டது. அவர் அவர்களை மெசப்பொத்தாமியா மன்னன் கூசான் ரிசத்தாயிமிடம் ஒப்படைத்து விட்டார். இஸ்ரயேலர் கூசான் ரிசத்தாயிமுக்கு எட்டாண்டுகள் அடிமைப்பட்டிருந்தனர்.

9 இஸ்ரயேலர் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட்டனர். ஆண்டவர் அவர்களுக்கு விடுதலை அளிக்க ஒருவரை எழச் செய்தார். அவர் காலேபின் இளைய சகோதரரான கெனாசின் மகன் ஒத்னியேல். அவர் அவர்களுக்கு விடுதலை அளித்தார். * யோசு 19:49-50..

நியாயாதிபதிகள் அதிகாரம் 3

10 அவர்மீது ஆண்டவரின் ஆவி இருந்தது. அவர் இஸ்ரயேலருக்கு நீதித்தீர்ப்பு வழங்கினார். அவர் போருக்குச் சென்றார். அவரிடம் மெசப்பொத்தாமியா மன்னன் கூசான் ரிசத்தாயிமை ஆண்டவர் ஒப்படைத்தார். அவர் கூசான் ரிசத்தாயிமின் மீது வெற்றி கொண்டார்.

11 நாடு நாற்பது ஆண்டுகள் அமைதியாக இருந்தது. பின் கெனாசின் மகன் ஒத்னியேல் இறந்தார்.

ஏகூது 12 இஸ்ரயேல் மக்கள் மீண்டும் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தனர். மோவாபின் மன்னன் எக்லோனை இஸ்ரயேலருக்கு எதிராக ஆண்டவர் வலிமைப்படுத்தினார். ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தனர்.

நியாயாதிபதிகள் அதிகாரம் 3

13 அவன் தன்னுடன் அம்மோனியரையும் அமலேக்கியரையும் சேர்த்துக்கொண்டு சென்று, இஸ்ரயேலரை வென்று, பேரீச்ச நகரைக் கைப்பற்றினான்.

14 இஸ்ரயேல் மக்கள் மோவாபின் மன்னன் எக்லோனுக்குப் பதினெட்டு ஆண்டுகள் அடிமைப்பட்டிருந்தனர்.

15 இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட்டனர். ஆண்டவர் அவர்களுக்கு விடுதலை அளிக்க பென்யமினைச் சார்ந்த கேராவின் மகன் ஏகூதை எழச் செய்தார். அவர் இடக்கை மனிதர். இஸ்ரயேல் மக்கள் மோவாபின் மன்னன் எக்லோனுக்குக் கப்பம் கட்டுமாறு அவரை அனுப்பிவைத்தனர்.

நியாயாதிபதிகள் அதிகாரம் 3

16 ஏகூது தமக்கு ஒரு முழ நீளமும், இருபக்கம் கருக்குமுள்ள வாள் ஒன்றைச் செய்து கொண்டார். அதை அவர் தம் ஆடைகளுக்கு அடியில் வலதுதொடையில் கட்டி வைத்துக்கொண்டார்.

17 அவர் மோவாபு மன்னன் எக்லோனுக்குக் கப்பத்தைச் செலுத்தினார். எக்லோன் மிகவும் பருத்த மனிதன்.

18 ஏகூது கப்பத்தைச் செலுத்தி முடித்ததும், கப்பப் பொருள்களைச் சுமந்து வந்த மக்களை அவர் அனுப்பிவிட்டார்.

நியாயாதிபதிகள் அதிகாரம் 3

19 அவர் கில்காலுக்கு அருகில் உள்ள சிலைகள் வரை சென்று திரும்பி வந்து, “மன்னரே! என்னிடம் உமக்கு ஓர் இரகசிய செய்தி உள்ளது” என்றார். அவன் “அமைதி” என்றான். அவனைச் சுற்றி நின்ற அனைவரும் அவனை விட்டுவிட்டு வெளியேறினர்.

20 ஏகூது அவன் அருகில் வந்தார். அப்பொழுது அவன் குளிர்ந்த மேலறையில் தனியாக அமர்ந்திருந்தான். ஏகூது, “உமக்கான கடவுளின் செய்தி ஒன்று என்னிடம் உள்ளது” என்று கூற, அவன் தன் இருக்கையிலிருந்து எழுந்தான்.

நியாயாதிபதிகள் அதிகாரம் 3

21 ஏகூது தம் இடக்கையை நீட்டி வலது தொடையிலிருந்து வாளை உருவி அவனுடைய வயிற்றில் குத்தினார்.

22 வாளோடு கைப்பிடியும் உள்ளே இறங்கியது. கொழுப்பு கைப்பிடியை மூடியதால், வாளை வயிற்றிலிருந்து வெளியே அவரால் உருவ முடியவில்லை. அது பின்புறமாக வெளியே வந்தது.

23 ஏகூது முன்தளத்திற்கு வந்து மேலறையின் கதவுகளை அடைத்துப் பூட்டினார்.

24 அவர் வெளியே சென்றபின், மன்னனின் வேலையாளர்கள் வந்தனர். இதோ! அவனது மேலறையில் கதவுகள் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டனர். அவன் குளிர்ந்த மேலறையின் கழிவறைக்குத்தான் சென்றிருப்பான் என்று கூறிக் கொண்டனர்.

நியாயாதிபதிகள் அதிகாரம் 3

25 அவர்கள் காத்திருந்து ஏமாற்றமடைந்தனர். மேலறையின் கதவுகளை அவன் திறக்காமல் போகவே, அவர்கள் சாவியை எடுத்துத் திறந்தார்கள். இதோ! அவர்கள் தலைவன் தரையில் இறந்து கிடந்தான்.

26 அவர்கள் காத்திருந்த நேரத்தில் ஏகூது கற்சிலைகளைக் கடந்து, செயிராவுக்குத் தப்பி ஓடினார்.

27 அவர் அங்கு வந்து எப்ராயிம் மலையில் எக்காளம் ஊதினார். அவர் தலைமையில் இஸ்ரயேல் மக்கள் மலைநாட்டிலிருந்து கீழே இறங்கினர்.

நியாயாதிபதிகள் அதிகாரம் 3

28 அவர் அவர்களிடம், “என் பின்னால் வாருங்கள். ஆண்டவர் மோவாபியராகிய உங்கள் எதிரிகளை உங்களிடம் ஒப்படைத்துள்ளார்” என்றார். அவர்கள் அவர் பின்னே சென்று மோவாபுக்கு எதிரே இருந்த யோர்தானின் கடவுதுறைகளைக் கைப்பற்றினர். எவரும் கடந்து செல்ல அனுமதிக்கவில்லை.

29 அவர்கள் அவ்வமயம் மோவாபியருள் உடற்கட்டும் வலிமையும் வாய்ந்த பத்தாயிரம் பேரைக் கொன்றனர். எவரும் தப்பிவில்லை.

நியாயாதிபதிகள் அதிகாரம் 3

30 அந்நாளில் மோவாபு இஸ்ரயேலின் ஆற்றலால் அடக்கப்பட்டது. எண்பது ஆண்டுகள் நாடு அமைதியாக இருந்தது.

சம்கார் 31 ஏகூதுக்குப் பின், அனாத்தின் மகன் சம்கார் தலைவராக இருந்தார். அவர் அறுநூறு பெலிஸ்தியரைக் கலப்பைக் கொழுவால் கொன்றார். அவரும் இஸ்ரயேலுக்கு விடுதலை அளித்தார்.