யோசுவா அதிகாரம் 23
11 உங்கள் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்புகூர்வதில் மட்டும் கருத்தாயிருங்கள்.
12 மாறாக, நீங்கள் வழிவிலகி இங்கு எஞ்சியுள்ள வேற்றினத்தாருடன் சேர்ந்துகொண்டு அவர்களுடன் கலப்புமணம் செய்து கொண்டால்,
13 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் முன்னிருந்து அவ்வேற்றினத்தவரைத் தொடர்ந்து விரட்டிக் கொண்டிருக்கமாட்டார் என்பதை நன்கு அறிந்துகொள்ளுங்கள். மாறாக, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு கொடுத்த இந்த நல்ல நாட்டிலிருந்து நீங்கள் அழிந்துபோகும் வரையிலும் அவர்கள் உங்களுக்கு வலைப்பொறியாகவும் கண்ணிகளாகவும், உங்கள் பக்கங்களில் தொல்லையாகவும், உங்கள் கண்களில் முற்களாகவும் இருப்பார்கள்.
8