Tamil சத்தியவேதம்

யோபு மொத்தம் 42 அதிகாரங்கள்

யோபு

யோபு அதிகாரம் 26
யோபு அதிகாரம் 26

‘பில்தாத்தின் சொற்கள் வீணே’ 1 அதற்கு யோபு கூறிய பதில்:

2 என்போன்ற வலிமையற்றவர்க்கு எத்துணைப் துணைபுரிந்தீர்! ஆற்றலற்ற தோளுக்கு எவ்வளவு துணைநின்றீர்! [* ‘எனது’ என்பது எபிரேய பாடம்.. ]

யோபு அதிகாரம் 26

3 என் போன்ற அறிவற்றவர்க்கு எவ்வளவு அறிவுரை கூறினீர்! நன்னெறிகளை நிறையக் காட்டீனீர்!

4 எவர் துணைகொண்டு இயம்பினீர் இம்மொழிகளை? எவர்தம் ஏவுதல் உம்மிடமிருந்து வெளிப்பட்டது?

யோபு அதிகாரம் 26

5 கீழ்உலகின் ஆவிகள் நடுங்குகின்றன; நீர்த் திரள்களும் அவற்றில் வாழ்வனவும் அஞ்சுகின்றன.

6 பாதாளம் கடவுள்முன் திறந்து கிடக்கிறது; படுகுழி அவர்முன் மூடப்படவில்லை.

7 வெற்றிடத்தில் வடபுறத்தை அவர் விரித்தார்; காற்றிடையே உலகைத் தொங்கவிட்டார்.

யோபு அதிகாரம் 26

8 நீரினை மேகத்துள் பொதித்துள்ளார்; அதன் நிறைவால் முகிலும் கிழிவதில்லை.

9 தம் அரியணையின் முகத்தை மூடுகின்றார்; முகிலை அதன்மேல் பரப்புகின்றார்.

10 நீர்ப்பரப்பின் மீது வட்டம் வரைந்து, இருளுக்கும் ஒளிக்குமிடையில் எல்லை அமைத்தார்.

யோபு அதிகாரம் 26

11 விண்ணின் தூண்கள் அதிர்கின்றன; அவர் அதட்டலில் அதிர்ச்சியடைகின்றன.

12 ஆழியைத் தம் ஆற்றலால் அடக்கினார்; இராகாபை அழித்தார் அறிவுக்கூர்மையால்.

13 தம் மூச்சால் வான்வெளியை ஒளிர்வித்தார்; தம் கையால் விரைந்தோடும் பாம்பை ஊடுருவக் குத்தினார்.

யோபு அதிகாரம் 26

14 ஓ! இவையாவும் அவர்தம் செயல்களின் விளிம்புகளே! எத்துணை மென்குரல் அவற்றில் கேட்கின்றது. அவர்தம் வல்லமையின் இடிமுழக்கத்தை அறிய யாரால் இயலும்?