Tamil சத்தியவேதம்
ஆதியாகமம் மொத்தம் 50 அதிகாரங்கள்
ஆதியாகமம்
ஆதியாகமம் அதிகாரம் 10
ஆதியாகமம் அதிகாரம் 10
நோவா புதல்வரின் வழிமரபினர்
(1 குறி 1:5-23)
1 நோவாவின் புதல்வர் சேம், காம், எப்பேத்து ஆகியோரின் வழிமரபினர் இவர்களே. வெள்ளப் பெருக்குக்குப்பின் அவர்களுக்குப் புதல்வர் பிறந்தனர். * தொநூ 1: 28.
2 எப்பேத்தின் புதல்வர்: கோமேர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மெசேக்கு, தீராசு.
ஆதியாகமம் அதிகாரம் 10
3 கோமேரின் புதல்வர்: அஸ்கனாசு, இரிபாத்து, தோகர்மா.
4 யாவானின் புதல்வர்: எலிசா, தர்சீசு, கித்திம், தோதானிம். * லேவி 7:26-27; லேவி 17:10-14; 19:26; இச 12:16,23; 15: 23.
5 இவர்கள் வழிவந்த கடற்கரை நாட்டினர் மொழி, குடும்ப, இனவாரியாகப் பிரிந்து தம் நாடுகளில் பரவினர்.
6 காமின் புதல்வர்; கூசு, எகிப்து, பூற்று, கானான். * தொநூ 1:26; விப 20: 13.
ஆதியாகமம் அதிகாரம் 10
7 கூசின் புதல்வர்; செபா, அவிலா, சப்தா, இராமா, சப்தக்கா. இராமாவின் புதல்வர்; சேபா, தெதான். * தொநூ 1:28..
8 மேலும் கூசுக்கு நிம்ரோது பிறந்தான். இவன்தான் முதன்முதலாக உலகத்தில் பேராற்றல் கொண்டவனாக விளங்கியவன்.
9 ஆண்டவர் திருமுன் இவன் ஆற்றல்மிக்க வேடனாக இருந்தான். இதனால் “ஆண்டவர் திருமுன் நிம்ரோதைப் போன்ற ஆற்றல்மிக்க வேடன்” என்ற வழக்கு ஏற்படலாயிற்று.
ஆதியாகமம் அதிகாரம் 10
10 முதன்முதலில் சினயார் நாட்டிலிருந்த பாபேல், எரேக்கு, அக்காது, கல்னே ஆகியவை அவன் ஆட்சிக்குள் வந்தன.
11 அந்நாட்டிலிருந்து அசீரியா நாட்டுக்குச் சென்று, அங்கே நினிவே, இரகபோத்து, ஈர், காலாகு ஆகிய நகரங்களை அமைத்தான்.
12 நினிவேக்கும் காலாகிற்கும் இடையே மிகப்பெரிய நகரமாகிய இரசேனை அவன் நிறுவினான்.
13 எகிப்தின் புதல்வர்; லூதிம், அனாமிம், இலகாபிம், நப்துகிம்,
ஆதியாகமம் அதிகாரம் 10
14 பத்ருசிம், பெலிஸ்தியரின் மூதாதையரான கஸ்லுகிம், கப்தோரிம்.
15 கானானின் தலைமகன் சீதோன், ஏனைய புதல்வர்; ஏத்து,
16 எபுசி, எமோரி, கிர்காசி,
17 இவ்வி, அற்கி, சீனி,
18 அர்வாது, செமாரி, அமாத்தி. இந்தக் கானானின் குடும்பங்கள் பின்னர் பிரிந்து பரவலாயின.
19 கானானியர் நாட்டு எல்லை சீதோனிலிருந்து தெற்கே கெரார் செல்லும் திசையில் காஸாவரையும் கிழக்கில் சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம் செல்லும் திசையில் இலாசா வரையும் பரவியிருந்தது.
ஆதியாகமம் அதிகாரம் 10
20 இவை காம் புதல்வரின் குடும்ப, மொழி, நாடு, இனவாரியான பிரிவுகள்.
21 எப்பேத்தின் மூத்த சகோதரன் சேமுக்குப் புதல்வர் பிறந்தனர். சேம் ஏபேரியரின் முதுபெருந்தந்தை.
22 சேமின் ஏனைய புதல்வர்: ஏலாம், அசீரியா, அர்பகசாது, லூது, ஆராம்.
23 ஆராமின் புதல்வர்: ஊசு, ஊல், கெத்தெர், மாசு.
24 அர்பகசாதுக்குச் செலாகு பிறந்தான். செலாகிற்கு ஏபேர் பிறந்தான்.
ஆதியாகமம் அதிகாரம் 10
25 ஏபேருக்கு புதல்வர் இருவர் பிறந்தனர்; ஒருவனின் பெயர் பெலேக்கு. ஏனெனில், அவன் காலத்தில்தான் உலக மக்கள் பிரிந்தனர். அவன் சகோதரனின் பெயர் யோக்தான்.
26 யோக்தானின் புதல்வர்; அல்மோதாது, செலேபு, அட்சர்மாவேத்து, எராகு,
27 அதோராம், ஊசால், திக்லா,
28 ஓபால், அபிமாவேல், சேபா,
29 ஓபீர், அவிலா, யோபாபு.
ஆதியாகமம் அதிகாரம் 10
30 அவர்கள் வாழ்ந்த நாடு மேசாவிலிருந்து கிழக்கே செப்பார் செல்லும் திசையில் இருந்த மலைநாடுவரை பரவியிருந்தது.
31 இவை சேம் புதல்வரின் குடும்ப, மொழி, நாட்டு, இனவாரியான பிரிவுகள்.
32 இவை நோவா புதல்வரின் வழிவந்த குடும்பங்களின் இனவாரியான தலைமுறைகள்.இவர்கள் வழிவந்த மக்களினங்களே வெள்ளப் பெருக்கிற்குப் பின் உலகின் எல்லா நாடுகளிலும் பரவின.