Tamil சத்தியவேதம்

எசேக்கியேல் மொத்தம் 48 அதிகாரங்கள்

எசேக்கியேல்

எசேக்கியேல் அதிகாரம் 26
எசேக்கியேல் அதிகாரம் 26

தீருக்கு எதிரான இறைவாக்கு 1 பதினோராம் ஆண்டில், மாதத்தின் முதல் நாள் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: * :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14.

2 மானிடா! எருசலேமைக் குறித்து தீர் நகரம் கூறியது: ‘ஆகா! நாடுகளின் கதவுகள் உடைக்கப்பட்டுள்ளன. அந்நகரம் எனக்குத் திறந்துள்ளது. அது அழிவில் வீழ்ந்துகிடப்பதால் நான் வளமடைவேன்.’ * :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14.

எசேக்கியேல் அதிகாரம் 26

3 எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; தீர் நகரே! நான் உனக்கு எதிராய் இருக்கிறேன்; கடல் அலைகள் எழும்புவதுபோல் உனக்கு எதிராகப் பல மக்களினங்கள் எழும்பும்படிச் செய்வேன். * :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14.

எசேக்கியேல் அதிகாரம் 26

4 அவர்கள் தீர் நகரின் மதில்களை அழிப்பர்; அதன் காவல் மாடங்களை இடித்துத் தள்ளுவர்; இடிபாடுகளும் அதில் இராதபடி வெறும் கற்பாறையாகத் தோன்றச் செய்வேன். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14 ]

எசேக்கியேல் அதிகாரம் 26

5 கடல் நடுவே வலைகாயும் திட்டாய் அது மாறும்; ஏனெனில் நானே உரைத்தேன் என்கிறார் தலைவராகிய ஆண்டவர். எல்லா மக்களினங்களுக்கும் கொள்ளைப் பொருளாகும் அந்நகர். * :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14.

எசேக்கியேல் அதிகாரம் 26

6 உள் நாட்டில் உள்ள அதன் புற நகர்கள் வாளால் அழிக்கப்படும்; அப்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வர். * :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14.

எசேக்கியேல் அதிகாரம் 26

7 ஏனெனில், தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; இதோ வடக்கிலுள்ள மன்னரின் மன்னனாம் பாபிலோனின் மன்னன் நெபுகத்னேசரைக் குதிரைகளோடும் தேர்களோடும் குதிரை வீரர்களோடும் பெரிய படைகளோடும் தீர் நகருக்கு எதிராக வரச் செய்வேன். * :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14.

எசேக்கியேல் அதிகாரம் 26

8 உள் நாட்டிலுள்ள உன் புறநகர்களை அவன் வாளால் வீழ்த்துவான்; உனக்கெதிராய் மண்மேடு எழுப்பி உன் மதில்களுக்கு எதிராய் முற்றுகை அரண் அமைத்து உனக்கெதிராய்த் தன் கேடயங்களை உயர்த்துவான். * :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14.

எசேக்கியேல் அதிகாரம் 26

9 அரண்தகர் பொறிகளை உன் மதில்களுக்கு எதிராய்த் திருப்பி, உன் காவல் மாடங்களைப் படைக் கலன்களால் நொறுக்குவான். * :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14.

எசேக்கியேல் அதிகாரம் 26

10 அவனுடைய குதிரைகள் மிகுதியானவை; எனவே அவை கிளப்பும் புழுதி உன்னை மூடும்; இடித்துத் திறக்கப்பட்ட நகரில் எளிதாய் நுழைவதுபோல் அவன் உன் நகரில் நுழைகையில், குதிரைகளும் வண்டிகளும் தேர்களும் எழுப்பும் பேரொலியால் உன் மதில்கள் அதிரும். * :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14.

எசேக்கியேல் அதிகாரம் 26

11 குதிரைகள் குளம்புகளால் உன் தெருக்களை அவன் மிதிப்பான்; வாளால் உன் மக்களைக் கொல்வான்; வலிமையான உன் தூண்கள் தரையில் வீழும். * :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14.

எசேக்கியேல் அதிகாரம் 26

12 அவர்கள் உன் செல்வத்தைக் கொள்ளையடித்து உன் வாணிபச் சரக்கைப் பறித்துக் கொண்டுபோவர்; உன் மதில்களை இடிப்பர்; உன் அழகிய வீடுகளை அழிப்பர்; உன் கற்களையும் மரங்களையும் இடிபாடுகளையும் கடலில் எறிவர். * :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14.

எசேக்கியேல் அதிகாரம் 26

13 உன் பாடலின் ஒலியை நிறுத்திவிடுவேன்; இனிமேல் உன் யாழோசை கேட்காது. * :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14. ; திவெ 18: 22.

14 உன்னை ஒரு வெறுமையான பாறையாக்குவேன்; நீயோ வலைகாயும் திட்டாவாய்; ஒருபோதும் நீ திரும்பக் கட்டியெழுப்பப்பட மாட்டாய்; ஏனெனில், ஆண்டவராகிய நானே இதை உரைத்தேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14 ]

எசேக்கியேல் அதிகாரம் 26

15 தலைவராகிய ஆண்டவர் தீர்நகருக்குக் கூறுவது இதுவே; நீ பேரொலியுடன் வீழ்ச்சியுறுகையில், உன் மக்கள் காயமுற்று ஓலமிடுகையில், அவர்கள் உன் நடுவே கொல்லப்படுகையில், கடற்கரை நகர்கள் அதிராவோ? * :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14.

எசேக்கியேல் அதிகாரம் 26

16 அப்போது, கடற்கரைத் தலைவர்கள் அனைவரும் தங்கள் அரியணையை விட்டிறங்கித் தங்கள் உயர்ந்த ஆடைகளையும் பூப் பின்னல் ஆடைகளையும் அகற்றுவர்; திகிலடைந்தவர்களாய்த் தரையில் அமர்வர்; ஒவ்வொரு நொடியும் உன்னைக் கண்டு மருண்டு நடுங்குவர். * :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14. ; திவெ 18:9- 10.

எசேக்கியேல் அதிகாரம் 26

17 அப்போது உன்னைக் குறித்து இரங்கற்பா ஒன்றுபாடி உன்னிடம் சொல்வர்; சீர்மிகு மாநகரே! நெய்தல்நில மாந்தரால் நிறைந்தவளே! மாகடலில் வலிமையோடு விளங்கினையே! நீயும் உன்னில் வாழ் மக்களும் அடுத்திருந்த அனைவர்க்கும் பேரச்சம் விளைவித்தீர்! அந்தோ! என்னே உன் வீழ்ச்சி! * :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14. ; திவெ 18:9- 10.

எசேக்கியேல் அதிகாரம் 26

18 இப்போது, உன் வீழ்ச்சியில் கடற்கரை நகர்கள் நடுங்குகின்றன; உன் அழிவில் தீவுகள் திகிலுறுகின்றன. * :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14. ; திவெ 18:9- 10.

எசேக்கியேல் அதிகாரம் 26

19 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; மக்கள் குடியேறாத நகர்போல் அழிந்த நகராக நான் உன்னை மாற்றுகையில், ஆழ்கடலை உன்மேல் கொண்டு வருகையில், அதன் வெள்ளம் உன்னை மோதி மூடுகையில், * :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14.

20 நான் உன்னைப் பாதாளத்தில் இறங்குகிறவர்களோடு இறக்கி, படுகுழியில் இருக்கும் மறக்கப்பட்டாரோடு சேர்ப்பேன். கீழுலகில் உன்னை இருக்க வைப்பேன். பழங்கால இடிபாடுகள் போன்ற படுகுழிக்குப் போகிறவர்களுடன் நீ இருப்பாய். நீ திரும்பி வரமாட்டாய்; வாழ்வோர் நாட்டில் உன் இடத்தை மீண்டும் பிடிக்க மாட்டாய். * :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14.

எசேக்கியேல் அதிகாரம் 26

21 உன்னை நடுங்குதற்குரிய முடிவுக்குக் கொண்டு வருவேன்; நீ இனி இருக்கமாட்டாய். உன்னைத் தேடுவார்கள்; ஆனால் நீ காணப்படமாட்டாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். * :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14. ; திவெ 18:21..