தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
2 நாளாகமம்

2 நாளாகமம் அதிகாரம் 3

1 பின்பு சாலமோன் யெருசலேமில் தம் தந்தை தாவீதுக்கு ஆண்டவரால் காட்சியில் காண்பிக்கப்பட்ட மோரியா மலையில் எபுசையனான ஒர்னானின் களத்தில் ஆண்டவருக்கு ஆலயம் கட்டத் தொடங்கினார். தாவீதே அந்த இடத்தை ஆயத்தம் செய்திருந்தார். 2 தம் ஆட்சியின் நான்காம் ஆண்டு, இரண்டாம் மாதம், இரண்டாம் நாள், சாலமோன் வேலையைத் தொடங்கி வைத்தார். 3 கடவுளின் ஆலயத்திற்குச் சாலமோன் போட்ட அடித்தளம் அக்கால அளவையின்படி அறுபது முழ நீளமாயும், இருபது முழ அகலமாயும் இருந்தது. 4 முகப்பில் இருந்த மண்டபத்தின் நீளம் ஆலயத்தின் அகலத்தைப் போல் இருபது முழமும், அதன் உயரம் நூற்றிருபது முழமுமாய் இருந்தன. சாலமோன் அதன் உட்புறத்தைப் பசும்பொன் தகட்டால் வேய்ந்தார். 5 ஆலயத்தின் நடுப்பகுதியைத் தேவதாரு மரப்பலகைகளால் மூடி, இவற்றையும் பசும்பொன் தகட்டால் வேய்ந்தார். அதன்மேல் பேரீந்து மடலைப் போன்றும், ஒன்றுடனொன்றும் பிணைக்கப்பட்ட சங்கலிகளைப் போன்றும் ஒருவித வேலைப்பாடுகளைச் செய்தார். 6 தளத்தை மிகவும் விலையுர்ந்த பளிங்குக் கற்களால் பாவி அழகுபடுத்தினார். பார்வாயீமினின்று கொண்டு வரப் பெற்ற பொன்னே பயன்படுத்தப் பட்டது. 7 கோவிலின் உத்திரங்களையும் நிலைகளையும் சுவர்களையும் கதவுகளையும் அப்பொன் தகடுகளால் வேய்ந்தார். சுவர்களில் கெருபீம்களின் உருவங்களைச் செதுக்கி வைத்தார். 8 பிறகு கோயிலின் உள் தூயகத்தைக் கட்டினார். அதன் நீளம் ஆலயத்தின் அகலத்தைப் போல் இருபது முழம்; அதன் அகலமும் இருபது முழமே. அதைச் சுமார் அறுநூறு தாலந்து பெறுமான பொன் தகடுகளால் வேய்ந்தார். 9 ஆணிகளெல்லாம் பொன்னாலேயே செய்யப்பட்டிருந்தன. அவற்றில் ஒவ்வொரு ஆணியும் ஐம்பது சீக்கல் பொன் நிறையுள்ளதாய் இருந்தது. மேல் அறைகளையும் சாலமோன் பொன்னால் வேய்ந்தார். 10 உள்தூயகத்தில் இரு கெருபீம்களின் உருவங்களையும் செய்து வைத்து அவற்றைப் பொன்தகட்டாலே வேய்ந்தார். 11 அவற்றின் இறக்கைகளின் மொத்தநீளம் இருபது முழம்: அதாவது ஓர் இறக்கையின் நீளம் ஐந்து முழம்; அது ஆலயத்தின் சுவரைத் தொட்டுக் கொண்டிருந்தது. அதன் மறு இறக்கையின் நீளமும் ஐந்து முழமே. அது மற்றக் கெருபீமின் இறக்கையைத் தொட்டுக் கொண்டிருந்தது. 12 அவ்வாறே இரண்டாவது கெருபீமின் அளவும்: அதாவது ஓர் இறக்கையின் நீளம் ஐந்து முழம். அவ்விறக்கை ஆலயத்தின் சுவரைத் தொட்டுக் கொண்டிருந்தது. அதன் மறு இறக்கையும் ஐந்து முழமே. அது முதல் கெருபீமின் இறக்கையைத் தொட்டுக் கொண்டிருந்தது. 13 இவ்வாறு அகன்று விரிந்திருந்த அந்தக் கெருபீம்களின் இறக்கைகளின் நீளம் மொத்தம் இருபது முழம். அவை தம் கால்களை ஊன்றி நின்று கொண்டிருந்தன. அவை ஆலயத்தின் நடுப்பகுதியை நோக்கிய வண்ணமாய் இருந்தன. 14 சாலமோன் இளநீல நூலாலும் ஊதா நூலாலும் சிவப்பு நூலாலும் மெல்லிய சணல் நூலாலும் ஒரு திரையை நெய்யச் செய்தார். அதில் கெருபீம்களின் உருவங்கள் பொறிக்கப் பெற்றிருந்தன. 15 ஆலயக் கதவுகளுக்கு முன் முப்பத்தைந்து முழ உயரமான இரண்டு தூண்களை நாட்டினார். அவற்றின் போதிகைகளின் உயரம் ஐந்து முழம். 16 உள் தூயகத்தில் போடப்பட்டுள்ள சங்கிலிகளைப் போன்ற வேலைப்பாடுகளைச் செய்து தூண்களின் போதிகைகளின் மேல் அவற்றைப் பற்ற வைத்தார். மேலும் நூறு மாதுளம் பழங்களைச் செய்து அவற்றைச் சிறிய சங்கிலிகளில் தொங்க விட்டார். 17 அந்தத் தூண்களை ஆலய வாயிலின் முன் வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலுமாக நாட்டி வைத்தார். வலப்பக்கத்துத் தூணுக்கு யாக்கீன் என்றும், இடப்பக்கத்துத் தூணுக்குப் போவாஸ் என்றும் பெயரிட்டார்.
1 பின்பு சாலமோன் யெருசலேமில் தம் தந்தை தாவீதுக்கு ஆண்டவரால் காட்சியில் காண்பிக்கப்பட்ட மோரியா மலையில் எபுசையனான ஒர்னானின் களத்தில் ஆண்டவருக்கு ஆலயம் கட்டத் தொடங்கினார். தாவீதே அந்த இடத்தை ஆயத்தம் செய்திருந்தார். .::. 2 தம் ஆட்சியின் நான்காம் ஆண்டு, இரண்டாம் மாதம், இரண்டாம் நாள், சாலமோன் வேலையைத் தொடங்கி வைத்தார். .::. 3 கடவுளின் ஆலயத்திற்குச் சாலமோன் போட்ட அடித்தளம் அக்கால அளவையின்படி அறுபது முழ நீளமாயும், இருபது முழ அகலமாயும் இருந்தது. .::. 4 முகப்பில் இருந்த மண்டபத்தின் நீளம் ஆலயத்தின் அகலத்தைப் போல் இருபது முழமும், அதன் உயரம் நூற்றிருபது முழமுமாய் இருந்தன. சாலமோன் அதன் உட்புறத்தைப் பசும்பொன் தகட்டால் வேய்ந்தார். .::. 5 ஆலயத்தின் நடுப்பகுதியைத் தேவதாரு மரப்பலகைகளால் மூடி, இவற்றையும் பசும்பொன் தகட்டால் வேய்ந்தார். அதன்மேல் பேரீந்து மடலைப் போன்றும், ஒன்றுடனொன்றும் பிணைக்கப்பட்ட சங்கலிகளைப் போன்றும் ஒருவித வேலைப்பாடுகளைச் செய்தார். .::. 6 தளத்தை மிகவும் விலையுர்ந்த பளிங்குக் கற்களால் பாவி அழகுபடுத்தினார். பார்வாயீமினின்று கொண்டு வரப் பெற்ற பொன்னே பயன்படுத்தப் பட்டது. .::. 7 கோவிலின் உத்திரங்களையும் நிலைகளையும் சுவர்களையும் கதவுகளையும் அப்பொன் தகடுகளால் வேய்ந்தார். சுவர்களில் கெருபீம்களின் உருவங்களைச் செதுக்கி வைத்தார். .::. 8 பிறகு கோயிலின் உள் தூயகத்தைக் கட்டினார். அதன் நீளம் ஆலயத்தின் அகலத்தைப் போல் இருபது முழம்; அதன் அகலமும் இருபது முழமே. அதைச் சுமார் அறுநூறு தாலந்து பெறுமான பொன் தகடுகளால் வேய்ந்தார். .::. 9 ஆணிகளெல்லாம் பொன்னாலேயே செய்யப்பட்டிருந்தன. அவற்றில் ஒவ்வொரு ஆணியும் ஐம்பது சீக்கல் பொன் நிறையுள்ளதாய் இருந்தது. மேல் அறைகளையும் சாலமோன் பொன்னால் வேய்ந்தார். .::. 10 உள்தூயகத்தில் இரு கெருபீம்களின் உருவங்களையும் செய்து வைத்து அவற்றைப் பொன்தகட்டாலே வேய்ந்தார். .::. 11 அவற்றின் இறக்கைகளின் மொத்தநீளம் இருபது முழம்: அதாவது ஓர் இறக்கையின் நீளம் ஐந்து முழம்; அது ஆலயத்தின் சுவரைத் தொட்டுக் கொண்டிருந்தது. அதன் மறு இறக்கையின் நீளமும் ஐந்து முழமே. அது மற்றக் கெருபீமின் இறக்கையைத் தொட்டுக் கொண்டிருந்தது. .::. 12 அவ்வாறே இரண்டாவது கெருபீமின் அளவும்: அதாவது ஓர் இறக்கையின் நீளம் ஐந்து முழம். அவ்விறக்கை ஆலயத்தின் சுவரைத் தொட்டுக் கொண்டிருந்தது. அதன் மறு இறக்கையும் ஐந்து முழமே. அது முதல் கெருபீமின் இறக்கையைத் தொட்டுக் கொண்டிருந்தது. .::. 13 இவ்வாறு அகன்று விரிந்திருந்த அந்தக் கெருபீம்களின் இறக்கைகளின் நீளம் மொத்தம் இருபது முழம். அவை தம் கால்களை ஊன்றி நின்று கொண்டிருந்தன. அவை ஆலயத்தின் நடுப்பகுதியை நோக்கிய வண்ணமாய் இருந்தன. .::. 14 சாலமோன் இளநீல நூலாலும் ஊதா நூலாலும் சிவப்பு நூலாலும் மெல்லிய சணல் நூலாலும் ஒரு திரையை நெய்யச் செய்தார். அதில் கெருபீம்களின் உருவங்கள் பொறிக்கப் பெற்றிருந்தன. .::. 15 ஆலயக் கதவுகளுக்கு முன் முப்பத்தைந்து முழ உயரமான இரண்டு தூண்களை நாட்டினார். அவற்றின் போதிகைகளின் உயரம் ஐந்து முழம். .::. 16 உள் தூயகத்தில் போடப்பட்டுள்ள சங்கிலிகளைப் போன்ற வேலைப்பாடுகளைச் செய்து தூண்களின் போதிகைகளின் மேல் அவற்றைப் பற்ற வைத்தார். மேலும் நூறு மாதுளம் பழங்களைச் செய்து அவற்றைச் சிறிய சங்கிலிகளில் தொங்க விட்டார். .::. 17 அந்தத் தூண்களை ஆலய வாயிலின் முன் வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலுமாக நாட்டி வைத்தார். வலப்பக்கத்துத் தூணுக்கு யாக்கீன் என்றும், இடப்பக்கத்துத் தூணுக்குப் போவாஸ் என்றும் பெயரிட்டார்.
  • 2 நாளாகமம் அதிகாரம் 1  
  • 2 நாளாகமம் அதிகாரம் 2  
  • 2 நாளாகமம் அதிகாரம் 3  
  • 2 நாளாகமம் அதிகாரம் 4  
  • 2 நாளாகமம் அதிகாரம் 5  
  • 2 நாளாகமம் அதிகாரம் 6  
  • 2 நாளாகமம் அதிகாரம் 7  
  • 2 நாளாகமம் அதிகாரம் 8  
  • 2 நாளாகமம் அதிகாரம் 9  
  • 2 நாளாகமம் அதிகாரம் 10  
  • 2 நாளாகமம் அதிகாரம் 11  
  • 2 நாளாகமம் அதிகாரம் 12  
  • 2 நாளாகமம் அதிகாரம் 13  
  • 2 நாளாகமம் அதிகாரம் 14  
  • 2 நாளாகமம் அதிகாரம் 15  
  • 2 நாளாகமம் அதிகாரம் 16  
  • 2 நாளாகமம் அதிகாரம் 17  
  • 2 நாளாகமம் அதிகாரம் 18  
  • 2 நாளாகமம் அதிகாரம் 19  
  • 2 நாளாகமம் அதிகாரம் 20  
  • 2 நாளாகமம் அதிகாரம் 21  
  • 2 நாளாகமம் அதிகாரம் 22  
  • 2 நாளாகமம் அதிகாரம் 23  
  • 2 நாளாகமம் அதிகாரம் 24  
  • 2 நாளாகமம் அதிகாரம் 25  
  • 2 நாளாகமம் அதிகாரம் 26  
  • 2 நாளாகமம் அதிகாரம் 27  
  • 2 நாளாகமம் அதிகாரம் 28  
  • 2 நாளாகமம் அதிகாரம் 29  
  • 2 நாளாகமம் அதிகாரம் 30  
  • 2 நாளாகமம் அதிகாரம் 31  
  • 2 நாளாகமம் அதிகாரம் 32  
  • 2 நாளாகமம் அதிகாரம் 33  
  • 2 நாளாகமம் அதிகாரம் 34  
  • 2 நாளாகமம் அதிகாரம் 35  
  • 2 நாளாகமம் அதிகாரம் 36  
×

Alert

×

Tamil Letters Keypad References